தீவிரவாதிகள் தாக்கி காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் சுதர்ஷன், நாராயணன். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் 3 தீவிரவாதிகள்காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய போது, தீவிரவாதிகள் திருப்பித் தாக்கியதில்இச்சம்பவம் ஏற்பட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தீவிரவாதி பலி:
இதே மாவட்டத்தில் ரென்கேட் பகுதியில் பதுங்கு குழிகளில் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை நோக்கி ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருதீவிரவாதி கொல்லப்பட்டார். 3 பேர் தப்பித்து விட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications