இந்திய கிளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஒரே அங்கீகாரம் - மைக்ரோசாப்ட் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகத்திலும், இந்தியாவில் ஹைதராபாத்தில்உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியானசலுகைகளையும், வசதிகளையும், நிலையையும் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம்முடிவு செய்துள்ளது.

உலகிலேயே முதன்மையான சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம்உள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ் இதன் தலைவராக உள்ளார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர்என்றாலும் இந்தியர்கள்தான் அதிக அளவில் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவிலும் ஒரு கிளை அலுவலகத்தைத்தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் வளர்ச்சி மையம் என்ற பெயரில் ஹைதராபாத்தில்இந் நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களையும்அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் ஒரேவிதமாக நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹைதராபாத் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் புதிதாக சாப்ட்வேர் ஏதாவதுஉருவாக்கினால் அதற்கு, அமெரிக்காவில் உள்ள தலைமை நிலையத்தில் எப்படிகருதப்பட்டு அதற்கான அங்கீகாரம் வழங்கப்படுமோ அதே மாதிரியான அங்கீகாரம்இங்கேயும் வழங்கப்படும்.

இரு நாடுகளிலும் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும்ஒரே மாதிரியாகவே நடத்தப்படுவார்கள். அனைவரும் ஒரே சலுகைகள், வசதிகள்செய்தி தரப்படும் என்றார் ஹைதராபாத்தில் உள்ள கிளை நிறுவனத்தின் நிர்வாகஇயக்குநர் ஸ்ரீநி கோப்போலு தெரிவித்தார்.

அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே இருநாடுகளில்தான் தனது கிளைகளைத் திறந்துள்ளது. ஒன்று இஸ்ரேலில் உள்ளது.மற்றொன்று இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ளதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ், ஹைதராபாத்கிளையின் வளர்ச்சிக்கு மேலும் ரூ.225 கோடியை வழங்கினார். தற்போது இக்கிளையில் 85 பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தஎண்ணிக்கையை 300 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்கோப்போலு.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+