அதிமுக உடையும், காங்கிரஸ் சிதறும்: சுவாமி சொல்கிறார்
சென்னை:
அதிமுக கூட்டணி பிளவுபடும், காங்கிரஸ் கட்சி சிதறு தேங்காய் மாதிரி உடைந்து விடும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறினார்.
சென்னையில் சுவாமி அளித்த பேட்டி:
பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல் களத்தில் இறக்கி விட தீர்மானித்துள்ளார். இதற்காக அங்கு வன்முறைதிட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.
அரசு பஸ்களை பாமகவினர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதற்காக ராமதாஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தேசிய சிந்தனை உள்ள தலைவர்கள், திராவிட கட்சிகளிடம் இருந்து விலகி வந்துமூன்றாவது அணியை உருவாக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் செயல்படும் மூப்பனார் எப்படி சுயமரியாதை, தன்மானத்தோடு இருக்க முடியும். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்சமீபத்தில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். ஆனாலும், ஜெயலலிதா அவர் மீது இப்போது மானநிஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
மூன்றாவது அணி அமைக்கும் எனது முயற்சிக்கு டிசம்பருக்குள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதன் பின்னர் அதிமுக கூட்டணி துண்டு துண்டாக உடையும். இல்லையேல்இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ் சிதறு காய் போல சிதறும்.
23ம் தேதி நடைபெறும் பெரியார் விழாவில் வீரமணியுடன் காங்கிரஸ் மேடை ஏறுகிறது. ராஜீவ் கொலையாளிகளுக்காக பகிரங்க உதவி புரியும் வீரமணியுடன்கைகோர்ப்பது சோனியாவுக்கு இழைக்கப்படும் அவமானமாகும். இதுபற்றி சோனியாவிடம் புகார் கூறி விட்டு தான் வந்துள்ளேன் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications