பயங்கரவாதத்தை தடுக்க ஐ.நா.வின் ஆதரவை நாடுகிறது இந்தியா
ஐக்கிய நாடுகள் சபை:
சர்வதேச பயங்கரவாதத்தை தடுத்த நிறுத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்தியாவேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நா.சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
இன்று அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும், தேசியஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தீவிரவாதிகள் ஆயுதபலமும், பணபலமும் பெற்றிருந்தால் நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து விடும். இந்த நிலை மாற வேண்டும்.எல்லைப்பகுதியில் ஏற்படும் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இந்தத் திட்டத்திற்கு ஐ.நா.வின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் ஐ.நா.சபையில் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும்.
தெற்காசியப் பகுதியில் அமைதியும், ஸ்தரத்தன்மையும் ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். பேச்சுவார்த்தை மூலமோ அல்லது மத்தியஸ்தம் செய்வதன்மூலமோ காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பாகிஸ்தான் தயார் என்றார் அப்துல் சதார்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications