வாழப்பாடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் பதிலடி
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பதவிக்காக இடை.யில் வந்தவர்கள் இல்லை எனதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு த.மா.கா. சட்டசபைஎதிர்க்கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சூடான பதில் அளித்துள்ளார்.
சோ.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஒரு அரசியல் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் தவறானநடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தவது முறையானது என்பது வாழப்பாடிராமமூர்த்தி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை சீர் கெட்டுள்ளது என்பதற்கு பத்திரிக்கைகள்செய்திகளே போதுமானதாகும். தமிழக விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்குபோதிய விலை இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நியாய விலைக்கடையில் கிடைக்கும் பொருட்களின் தரம் மிகக் குறைவாக உள்ளது.
த.மா.கா. நடத்தும் போரட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். எங்கள் போராட்டங்களுக்கு எல்லோரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நாங்கள் காந்தீய வழியில் காமராஜ் தலைமையில் செயலாற்றியவர்கள். இப்போதுமக்கள் தலைவர் மூப்பனார் தலைமையில் வீர நடை போட்டு வருகிறோம்.
நாங்கள் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்.அரசின் அடக்குமுறை எதிர்க்கவோ சிறை செல்லவோ த.மா.கா. தொணடர்கள் அஞ்சமாட்டார்கள்.












Click it and Unblock the Notifications