மீன், ஆமைகளை பச்சையாய் தின்று உயிர் தப்பிய மீனவர்கள்
சென்னை:
30 நாட்களாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீன், ஆமைகளை பச்சையாக தின்று உயிர் பிழைத்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த மாயாண்டி (45), பார்த்திபன் (35), மூர்த்தி (27), மதன் (22), வடிவேல் (28) ஆகிய 5 மீனவர்கள்கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி படகில் மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் திசை மாறிச் சென்ற இவர்கள் காணாமல் போய் விட்டனர்.
அவர்களை மீட்க அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக வங்க தேசம் அருகில் மீட்கப்பட்டனர். அந் நாட்டு அரசின்ஏற்பாட்டின்படி சென்னை அழைத்து வரப்பட்டனர். வியாழக்கிழமை அவர்கள் சென்னை திரும்பினர்.
நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில்,
சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் படகு திசை மாறி சென்று விட்டது. எங்கு சென்றது என்று எங்களுக்கு தெரியாது. படகில்நாங்கள் உயிருடன் இருந்தோம். அவ்வளது தான்.
நாங்கள் எடுத்துச் சென்ற தண்ணீர், சாப்பாடு எல்லாம் 5 நாட்களுக்குள் தீர்ந்து விட்டது. எங்கள் படகில் நாங்கள் பிடித்துவைத்திருந்த மீன்கள், ஆமைகள் மட்டுமே இருந்தன. பசியால் துடித்த நாங்கள் ஆமைகளை வெட்டி பச்சையாக சாப்பிட்டோம்.
படகில் தேங்கியிருந்த மழைத் தண்ணீரை துணியில் நனைத்து பிழிந்து குடித்தோம். இந்த நிலையில் நாங்கள் சென்ற படகுகொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தது. அதனால் படகில் இருந்த சிறு சிறு பலகைகளை ஒன்றாக கட்டி மிதவை போல் செய்துதயார் நிலையில் வைத்திருந்தோம்.
நாங்கள் எதிர்பார்த்தபடி கடந்த 9ம் தேதி படகு கடலில் மூழ்கியது. பின்னர் மிதவையில் மிதந்தபடி தத்தளித்து கொண்டுசமாளித்தோம். அப்போதும் மீன்களை தான் உண்டோம். கடல் நீரையே குடித்துக் கொண்டோம்.
கடந்த 18ம் தேதி மாலையில் தொலைவில் கப்பல் வருவதை கண்டோம். மனதில் நம்பிக்கை துளிர் விட்டது. துணியால் சைகைகாட்டி கப்பலை நெருங்கச் செய்தோம். அவர்கள் எங்களை காப்பாற்றினர். புதன்கிழமை எங்களை கடலோர காவல்படையிடம்ஒப்படைத்தனர்.
21 நாட்கள் படகிலும், 9 நிாட்கள் மிதவையிலும் தத்தளித்த நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழந்திருந்தோம்.ஆனால், கடவுள் எங்களை கைவிடவில்லை என்றனர் கண்ணீருடன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications