சியாரா லியோனில் இருந்து வாபஸாடு இந்திய துருப்புக்கள் முடிவு
ஐக்கிய நாடுகள்:
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாராலியோனில் அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் படையிலிருந்துவெளியேற இந்திய துருப்புக்கள் முடிவு செய்துள்ளன.
சியாரா லியோனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்குஅமைதி காப்புப் பணியில் ஐ.நா. படைகள் ஈடுபட்டுள்ளன. இப் படையில் 3,059துருப்புக்கள் உள்ளன.
தற்போது சியாரா லியோனில் பணியாற்றி வரும் ஐ.நா. படைக்கு மேஜர் ஜெனரல்விஜய் ஜெட்லி தலைவராக உள்ளார். அவருக்கும் அண்டை நாடான நைஜீரியாவுக்கும்இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விஜய் ஜெட்லேநீக்கப்படவேண்டும் என்று நைஜீரிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இப் பிரச்சினையால் சியாரா லியோனில் அமைதி காப்புப் பணியில் ஒழுங்காக ஈடுபடஐ.நா. படையால் முடியவில்லை. இதனால், விஜய் ஜெட்லேயை விலக்கிவிட்டுஅவருக்குப் பதிலாக வேறு ஒருவரை ஐ.நா. படையின் தலைவராக நியமிக்க ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில், ஐ.நா. படையிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ளஇந்தியா முடிவு செய்துள்ளது. சியாரா லியோனில் தனது துருப்புக்களின்எண்ணிக்கையை 13,000-மாக உயர்த்த ஐ.நா. சபை முடிவு செய்துள்ள நிலையில்,இந்தியா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சியாரா லியோனில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முடிவை ஐ.நா. சபைக்குத்தெரிவித்துவிட்டோம். இந்தியா இருந்த இடத்திலிருந்து வேறு ஒரு நாடு பணியாற்றவேஇம் முடிவை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. படைக்கான இந்திய செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்திய துருப்புக்களுக்குப் பதிலாக வேறு நாட்டுத் துருப்புக்களை அங்கு நியமிக்கஐ.நா. சபைக்கு அவகாசம் தரும் பொருட்டு சியாரா லியோனிலிருந்து படிப்படியாகஇந்திய துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்றார் அவர்.
ஆனால், அமைதி காப்புப் படைக்குத் தலைவராக உள்ள இந்திய அதிகாரி விஜய்ஜெட்லே நீக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சியாரா லியோனில் இருந்து விலகஇந்திய துருப்புக்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications