ஏன் ராஜினாமா செய்தேன்? புதுவை அமைச்சர் கண்ணன் விளக்கம்
பாண்டிச்சேரி:
புதுச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கானகாரணத்தை அமைச்சர் கண்ணன் கூறியுள்ளார்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து கண்ணன்புதன்கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் விவரம்:
நான் புதுவை த.மா.கா. தலைவர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேன் இன்னும்அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறேன். எனக்கு இயக்கத்தின் பல நண்பர்கள் ஆதரவுதெரிவித்துள்ளனர். நான் இன்னும் எம்.எல்.ஏ.கள் எவரையும் சந்திக்கவில்லை.
கட்சி தொண்டர்கள் உணர்வுகளுக்கும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்புகொடுத்து நான் ராஜினாமா செய்துள்ளேன்.
நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. எனக்கு தலைமை மீதும் எந்தவிதமான வருத்தமும் இல்லை.
எனது ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்த விதமான ஆபத்தும் வராது. நான் அமைச்சர்பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறேன். தொடர்ந்து ஆட்சியையும் ஆதரித்துவருவேன்.
நான் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களைக் கூற முடியும்.கட்சியில் குற்றச்சாட்டு, சந்தேகம் உள்ளவர்களுக்கு பதவி அளித்தது எனக்கு மனவருத்தத்தை தந்துள்ளது.
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் விட்டில் பணிபுரிந்து வந்த ஊர்க்காவல் படையைச்சேர்ந்தவர் மர்மமான முறையில் காணாமால் போனார். அது குறித்து அவரதுபெற்றோர் உயர்நீதி மன்றதத்தில் வாதாடி சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதிபெற்றுள்ளனர். நீதிபதி தனது தீர்ப்பில் இந்த வழக்கில் புதுவை அதிகாரிகளை நம்பமுடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு அமைச்சர். அந்த அமைச்சர் பதவியைராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை.கட்சித்தலைமையும் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை.
சி.பி.ஐ. விசாரணைக்கு பின்பு ஒரு அமைச்சர் பதவியில் தொடர்ந்து வருவதும் எனக்குவேதனை அளிக்கிறது. இந்த அமைச்சர் பல கட்சிகளைக் கெடுத்தவர்.
விருகம்பாக்கம் தொழிற்சாலைகளில் ஒரு அமைச்சர் ஆக்கிரமிப்பு செய்கிறார் எனஎனக்கு செய்திகள் கிடைத்துள்ளன. இது த.மா.கா.வின் நெறிக்கும், பண்பாட்டிற்கும்எதிரானது.
மக்களுக்கு இது போன்ற நடவடிக்கைகளால் கட்சி மீது உள்ள மதிப்பு குறையும். இதுபோன்றவற்றை பார்த்து என்னால் தலைமை பொறுப்பில் இருக்க முடியவில்லை.அதனால் தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
இது குறித்து கட்சித் தலைமையிடம் கூறியும் சரியான நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என கண்ணன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications