மதுரை மாவட்ட திமுக நிர்வாகம் பழனிவேல் ராஜனிடம் ஒப்படைப்பு- ஒதுக்கப்பட்டார் அழகிரி
மதுரை:
முதல்வர் கருணாநிதிக்கும், அவரது மகன் அழகிரிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதயைடுத்து தமிழகத்தின்தென் மாவட்ட தி.மு.கவை நிர்வகிக்கும் பொறுப்பு சபாநாயகர் பழனிவேல் ராஜனிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தென் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை அழகிரி தான் கட்டுப்படுத்தி வந்தார். மதுரை மாவட்ட திமுககிட்டத்தட்ட அழகிரியின் முழுக் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.
இதனால் மூத்த திமுக தலைவரும் மதுரையில் மிகவும் மதிக்கப்படும் தலைவருமான சபாநாயகர் பழனிவேல் ராஜன்கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். மிகப் பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச்சேர்ந்தவரான பழனிவேல் ராஜன், விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாகக் கூடஅறிவித்திருந்தார்.
ஆனால், இப்போது அழகிரியால் திமுகவுக்கே கெட்ட பெயர் ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளதால் மதுரைஉள்ளிட்ட திமுக பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பழனிவேல் ராஜனிடம் கருணாநிதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து பழனிவேல் ராஜன் மதுரைக்குப் புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications