போலீஸ் கண்ணில் உண்மையிலேயே மண்ணைத் தூவிய 2 கைதிகள்
சேலம்:
நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் போலீசார் கண்களில்மண்ணைத்தூவிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
கண்ணில் மண்ணைத் தூவுவது என வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆனால்உண்மையிலேயே கைதிகள் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பியசம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர்கள் மைக்கேல் ஜெயராஜ் (37), குமார்எனும் உதயகுமார் (35), செல்வராஜ் எனும் செந்தில் (33) ஆகிய மூவரும்.
இவர்களில் மைக்கேல் ஜெயராஜும், உதயகுமாரும் ஈரோட்டில் நடந்த ஒரு கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், இவர்கள் மீது அதனுடன் மேச்சேரியில்நடந்த வழிப்பறி தொடர்பான சம்பவம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
செந்தில் மீது மேச்சேரி வழிப்பறி கொள்ளிைல் குற்றம் சாட்டப்பட்டு மீதான விசாரணைநடந்து வருகிறது.
மேச்சேரி கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக கைதிகளை போலீசார்மேட்டூருக்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கு விசாரணை முடிந்து சேலம் பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணியளவில் சேலம்பஸ் நிலையம் வந்த போது கைதிகளில் ஒருவன் வயிற்றுக் கோளாறு இருப்பதாகவும்சோடா வேண்டும் என கேட்டு பெட்டிக் கடை வாசலில் நின்று கொண்டான்.
போலீசார் அவனுக்கு சோடா வாங்கிக் கொடுத்த போது மற்றொரு கைதி மண்ணைஎடுத்து போலீஸ்காரர் மணி மேகலன் கண்ணில் தூவினான். அவர் கண்ணில் மண்வேதனையால் அலறின்ார்.
இந்த சமயத்தைப் பயன்படுத்தி கைதிகள் மூவரும் தப்பி ஓடத் துவங்கினர்.நிலைமையை உணர்ந்த உடன் வந்த போலீஸ்காரர் வெள்ளையத்தேவன் கைதிகளைதுரத்திக் கொண்டு ஓடினார். அவர் செந்திலை பிடித்தார், செந்தில் அவரை தாக்கிவிட்டுதப்ப முயற்சிக்க அவர் விடவில்லை. இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.இதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் செந்திலை மடக்கிப்பிடித்தனர். மற்றஇருவரும் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து உதவி போலிஸ் கமிஷனர் கோபால், பஸ் ஸ்டாண்டில் உள்ளபள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் அழகு மற்றும் போலீசார் அங்குவிரைந்து வந்தனர்.
சண்டையில் காயம் அடைந்த போலீசுக்கும், கண்ணில் மண் தூவியதால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த போலீசுக்கும், லேசான காயம் அடைந்த கைதிக்கும் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதிகளை பிடிக்க தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications