வில்வித்தை: உலக சாதனையுடன் 4-வது முறையாக தங்கம் வென்ற தென் கொரிய மகளிர்
சிட்னி:
வில்வித்தைப் போட்டியில் பெண்களுக்கான அணிப் பிரிவில் தென் கொரியவீராங்கனைகள் புதிய உலக சாதனையுடன் தொடர்ந்து 4-வது முறையாக ஒலிம்பிக்கில்தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் தென் கொரிய அணியில் யுன் மி-ஜின்,கிம் லாம்-சூன், கிம் சூன்-யுங் ஆகியோர் இடம் பெற்றனர். இவர்கள் 251-239 என்றபுள்ளிகள் கணக்கில் உக்ரைன் அணியினரைத் தோற்கடித்து தங்கம் வென்றனர்.
இப் போட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக இவர்கள் தங்கப் பதக்கம்வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 54 அம்புகள் பிரிவில் இவர்கள்502 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்தனர்.
ஏற்கெனவே இருந்த சாதனை 500 புள்ளிகள். 1999-ல் இச் சாதனையைப் புரிந்ததும்தென் கொரிய மகளிர் அணியினர்தான்.
தங்கம் வென்ற தென் கொரிய அணியில் இடம் பெற்ற யுன் மி-ஜின் ஏற்கெனவேஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் உக்ரைன் அணியினர் வெள்ளிப் பதக்கமும், ஜெர்மனி அணியினர்வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications