இலவச சட்ட முகாம்கள் நடத்துகிறது அதிமுக
சென்னை:
மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்துகிறது அதிமுக. இதற்கான அறிவிப்பை அக்கட்சி பொதுச்செயலாளர்ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
ஜெயலலிதா அறிக்கை வருமாறு:
அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் கர்நாடகமாநிலங்களிலும் 27ம் தேதி தொடங்கி, நவம்பர் 25ம் தேதி முடிய மக்கள் நல இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் தொடர்ந்துநடைபெறும்.
இந்த மக்கள் நல இலவச சட்ட ஆலோசனை முகாம்களில் சிவில், கிரிமினல் மற்றும் விபத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில்நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்கள் பங்கேற்று ஏழை-எளிய மக்களின் வழக்குகள் குறித்து தகுந்த ஆலோசனைகள் வழங்குவர்.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த மக்கள் நல இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடைபெறும். விவரம் குறித்து ஆங்காங்கேஉள்ள மாவட்ட வழக்கறிஞர் பிரிவினர் உரிய முறையில் தகவல் தெரிவிப்பார்கள்.
27ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, 30ம் தேதி செங்கல்பட்டு, அடுத்த மாதம் 14ம் தேதி கடலூர்,விழுப்புரம், 17ம் தேதி தென்மாவட்டங்களுக்கான முகாம் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும்.
நவம்பர் 4ம் தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், 11ம் தேதி பாண்டிச்சேரி, 25ம் தேதி திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடைபெறும்.
வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பிலிப் தாமஸ், ராஜ்யசபா எம்.பி. தளவாய்சுந்தரம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications