தெற்காசிய மொழி பெயர்ப்புப் போட்டியில் இந்தியர்கள்ஆதிக்கம்
டெல்லி:
டெல்லியில் நடந்த முதலாவது தெற்காசிய மொழிபெயர்ப்புப் போட்டியில் இந்திய எழுத்தாளர்கள் பல பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.
முதலாவது கதா தெற்காசிய மொழி பெயர்ப்புப் போட்டி டெல்லியில் நடந்தது. கதா அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது. இதில் மொத்தம் உள்ள 20விருதுகளில் 18 விருதுகளை இந்தியர்கள் வென்று சாதனை படைத்தனர். மீதமிருந்த இரு விருதுகளை இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், நேபாளஎழுத்தாளரும் வென்றனர்.
டெல்லி பிரிட்டிஷ் கவுன்சிலில் வியாழக்கிழமை நடந்த விழாவில் பிரபல எழுத்தாளர் பீஷம் சஹ்னி விருதுகளை வழங்கினார். விருது ரூ. 2000 பரிசு மற்றும்பாராட்டுப் பத்திரத்தை உள்ளடக்கியது.
விருது பெற மொத்தம் 1580 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 1511 எழுத்தாளர்களும் அடஙகுவர். பாகிஸ்தானிலிருந்து 2,இலங்கையிலிருந்து 6 பேர், வங்கதேசத்திலிருந்து 31 பேர், நேபாளத்திலிருந்து 20 பேர், பூட்டானிலிருந்து ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர்.
தெற்காசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான சசி தேஷ்பான்டே, சல்மான் சாஹித், கண்டோகர் அஷ்ரப் ஹுசைன் ஆகியோர் விருது பெறத் தகுதியானமொழிபெயர்ப்புகளை தேர்வு செய்தனர். ஆங்கிலம் தவிர, தமிழ், பஞ்சாபி, உருது, சிந்தி, பங்களா ஆகிய மொழிகளில் வெளியான மொழி பெயர்ப்பு நூல்களுக்கும்பரிசு வழங்கப்பட்டது.
தமிழில், ராமையா குமார் (இந்தியா), உமா பாலு (இலங்கை) ஆகிய இரு எழுத்தாளர்கள் விருது வென்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications