பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம்: அரையிறுதியில் இந்தியாவின் பீனாமோல்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின்பீனாமோல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அவர் தான் கலந்த கொண்ட 3-வதுபிரிவில் அவர் 4-வதாக வந்தார். அவர் பந்தைய தூரத்தை 51.81 விநாடிகளில் ஓடிக்கடந்தார்.
முதல் சுற்றில் இவர் 51.51 விநாடிகளில் ஓடிக் கடந்தார் என்பதும், இப் போட்டியில்தங்கப் பதக்கம் வெல்லக்கூடும் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின கதேபிரீமேனையும் முந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக் தொடக்க விழாவில் கதே பிரீமேன்தான் ஒலிம்பிக் ஜோதியைஏற்றவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications