மமதாவை வரம்பு மீறி பேசுவதா? ஜோதிபாசுவுக்கு அத்வானி கண்டனம்
ஹைதராபாத்:
ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியை மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபாசு வரம்பு மீறிய வார்த்தைகளால் விமர்சித்திருப்பதற்கு மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முதல் ஜோதிபாசுவும், அத்வானியும் மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பெருகி வரும் வன்முறை காரணமாகவிரும்பத்தகாத வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருந்தனர்.
மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் திரிணாமுல் கட்சியினரை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என கூறியிருந்தார். ஆனாலும் மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த மத்திய தொழிலக பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட வியாழக்கிழமை அத்வானி வந்திருந்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு எஙகள் அமைச்சரவையைச் சேர்ந்த மமதா பானர்ஜி மீது வரம்பு மீறியவார்த்தைகளை உபயோகித்து விமர்சனம் செய்திருப்பது என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது .
பாசுவின் கோபம் மம்தாவின் மேல் அதிகமாக உள்ளது என்பதை நான் அறிந்து கொண்டேன். பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டுவரும்மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதையே பாசுவின் பேச்சு காட்டுகிறது.
பாசுவின் கடிதம் மேற்கு வங்கத்தில், வன்முறை நடந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அது ஒரு வன்முறைக்கு பதிலடி என கூறியுள்ளது. இது போன்றபதிலை நான் ஒரு மாநில அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. வன்முறை என்பது வன்முறைதான். அதை நியாயப்படுத்த முடியாது,
வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அந்த மாநில அரசின் கடமை. அதற்கான முயச்சியை அந்த மாநில அரசு எடுக்க வேண்டும் .
என்னைத் திருப்திப்படுத்த வேண்டியது தனது கடமையல்ல என பாசு கூறியிருக்கிறார். அது உண்மைதான். ஆனால் மேற்கு வங்க மக்களை அவர் திருப்திபடுத்தவேண்டும். அவருக்கு வாக்களித்த அம் மாநில மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியைத் தர வேண்டியது அவரது கடமை என அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications