ஜெ. தலைமையில் இன்று பெரியார் விழா
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் முன்னிலையில், அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் சனிக்கிழமை மாலைபெரியார் பிறந்தநாள் விழா நடக்கிறது.
தந்தை பெரியாரின் 122-வது பிறந்தநாள் விழாவை நடத்த அ.தி.மு.க., த.மா.கா.மற்றும் தோழமை கட்சிகள் கூட்டம்மூப்பனார் தலைமையில் நடந்தது,
அதில் மூப்பனார் முன்னிலையில்,ஜெயலலிதா தலைமையில் பெரியார் விழாநடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் குமாம்நபிஆசாத், மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ராஷ்டிரிய கட்சித் தலைவர் ஜெக வீரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.திராவிடர் கழக நிர்வாகி கலி. பூங்குன்றன் நன்றியுரை வழங்குகின்றார்.
மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications