மதுரை "யுத்தத்தால் நஷ்டம் ரூ. 1 கோடி
மதுரை:
மதுரையில் தந்தைக்கும், தணயனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் நடந்துகொண்டிருக்கும் "யுத்தத்தில், இதுவரை ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாககூறப்படுகிறது.
இந்த வன்முறைச் சம்பவங்களால் தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம்தான்கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
வன்முறை வேண்டாம். என் மீதுள்ள அன்புக்கு நன்றி என்று அழகிரியே வேண்டுகோள்விடுத்த பின்பும் இன்னும் பஸ் எரிப்பு, தாக்குதல்கள் நின்றபாடில்லை. அதிகாலை பஸ்சர்வீஸ்கள், நள்ளிரவு பஸ் சர்வீஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டபோதும், பகலில்ஓடிக்கொண்டிருக்கும் பஸ்களும் நடுநடுங்கியபடியே ஒடிக்கொண்டிருக்கின்றன.
சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பஸ்கள் முழுவதுமாக நாசப்படுத்தப்பட்டுள்ளன. இதில்ஒரு கல்லூரி பஸ்ஸூம், தனியாருக்கு சொந்தமான பஸ்களும் அடங்கும். இந்தவகையில் மட்டும் சுமார் அறுபது லட்சம் ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போக்குவரத்து நிர்வாகம் அதிகாலை 4.00 மணிக்குஇயக்க வேண்டிய வாகனங்களை காலை 6.30 மணிக்குத்தான் இயக்குகிறது.
இரவு ஏழுமணியோடு பஸ் போக்குவரத்தை நிறுத்திக் கொள்கிறது நிர்வாகம். இந்தநேரமாற்றம் காரணத்தினாலேயே, ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம்ஏற்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.
இது தவிர, வழக்கமான மக்கள் கூட்டம் இப்பொழுது பஸ்களில் இல்லை.போக்குவரத்து டல்லடித்து விட்டது. இதன் காரணமாக கலெக்ஷனும் குறைந்துவிட்டது.இதனாலும் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது போக்குவரத்துத் துறைக்கு.
இதுவரை சும ார் ஒரு கோடி ரூபாய் வரை இந்த அப்பா, மகன் சண்டையில் அரசுக்குநஷ்டமாகியிருக்கிறது என்கிறார் ஒரு அரசு அதிகாரி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications