நீச்சல்: கடைசி நாளில் மேலும் இரு உலக சாதனைகள் படைப்பு
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் 8 நாட்களாக நடைபெற்ற நீச்சல் போட்டிகள் சனிக்கிழமைமுடிவடைந்தன.
கடைசி நாளன்று 4 போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x100 மீட்டர் மெட்லி, பெண்கள் 50 மீட்டர் மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர்பிரீஸ்டைல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன
இதில் ஆண்கள்,பெண்களுக்கான 4 x 100 மீட்டர் மெட்லி போட்டியில் அமெரிக்கஅணி தங்கப் பதக்கத்தை வென்றது. இரண்டிலும் புதிய உலக சாதனைகள்படைக்கப்பட்டன.
ஆண்களுக்கான போட்டியில் அமெரிக்க அணி பந்தைய தூரத்தை 3 நிமிடம் 33.73விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது. இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவும்,3-வது இடத்தை ஜெர்மனியும் பிடித்தன.
பெண்களுக்கான போட்டியில் அமெரிக்க அணி பந்தைய தூரத்தை 3 நிமிடம் 58.30விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது. இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவும்,3-வது இடத்தை ஜப்பானும் பிடித்தன.
ஆண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியாவின் கிரான்ட்ஹாக்கெட் பந்தைய தூரத்தை 14 நிமிடம் 48.33 விநாடிகள் நீந்திக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் கீரென் பெர்கின்ஸும், 3-வது இடத்தைஅமெரிக்காவின் கிறிஸ் தாம்சனும் பெற்றனர்.
பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஹாலந்தின் இன்ஜி டி புருஜின்பந்தைய தூரத்தை 24.32 விநாடிகளில் நீந்திக் கடந்து தங்கம் வென்றார்.
இரண்டாவது இடத்தை ஸ்வீடனின் தெரசே அல்ஷாம்மரும், 3-ம் இடத்தைஅமெரிக்காவின் டாரா டோரெஸும் பிடித்தனர். ![]()
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications