தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்கிறார் ஜெ.
சென்னை:
தமிழக சட்டசபைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகள் மிக வேகமாக தேர்தல்களத்தில்இறங்கிக்கொண்டிருக்கின்றன.
அக்டோபர் மாதம் 10-ம் தேதி அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட இருக்கின்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி முடிவுசெய்யப்படும் என்கிறார்கள்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் டாக்டர் காளிமுத்துவின் தலைமையில் அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30மணிக்கு சென்னையில் கூடும்.
அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்புகளும் அனுப்பப்படும். அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும்,சிறப்பு அழைப்பாளர்களும் அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதா தனது முதல் கட்டமாக தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் விதமாகதென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.
15-ம் தேதி ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து தனது பயணத்தை தொடர்கிறார். 16,17 -ம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
18-ம் தேதி கோவில்பட்டியில் 52 ஜோடிகளுக்கு திருமணம், 5,200 பேர்களுக்கு ஆயுள் காப்பீட்டுப் பத்திரம் வழங்குகிறார். 19-ம் தேதி,மாற்றுக்கட்சிகளில் இருந்து அ.தி.மு.கவில் 5000 பேர் இணையும் விழாவில் கலந்து கொள்கிறார்.
22-ம் தேதி திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா, 24-ம் தேதி சிவகாசியில் உடல் ஊனற்றோர், விதவை தாய்மார்களுக்கு உதவிகளைவழங்குகிறார்.
இந்த சுற்றுப்பயண விபரத்தை அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications