அழகிரி தி.மு.க. உறுப்பினரே இல்லை .. கருணாநிதி
சென்னை:
அழகிரி தி.மு.க. உறுப்பினரே அல்ல; எனவே அவர் மீது கட்சித் தலைமையால் எந்தநடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கோட்டையில் திங்கள் கிழமை கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: த.மா.க.ா சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளதே?
பதில்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் நடத்துவது ஆர்ப்பாட்டம்அல்ல; மறியல் என்று அவர்களே கூறியுள்ளனர். மறியல் செய்தால் அதற்குரியநடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது மறியலில் ஈடுபட்டு ரிமான்ட் செய்யப்பட்டு,வழக்குகள் நடத்தப்பட்டு மூன்று மாதம், ஆறு மாதம் தண்டனை பெற்று சிறையில்இருந்தோம் என்பதை நினைவூட்டுகிறேன். அவர்கள் நடத்துவது ஆர்ப்பாட்டமோஅல்லது மறியலோ அமைதியாக நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி: மதுரையில் பஸ் எரித்த 8 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் (என்.எஸ்.ஏ)கைது செய்துள்ளனர். அதேபோல் மற்ற இடங்களில் நடந்த பஸ் எரிப்புக்கும்நடவடிக்கை உண்டா?
பதில்: பஸ்சை எரித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது என்றுஏற்கனவே உள்ள சட்டப்படி மதுரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வேறு காரணங்களுக்காக பஸ் எரித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான தொகையைகட்சியிடம் வசூலிக்கலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டதே?
பதில்: அந்த சட்டத்தை நான் கொண்டு வரவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்தார்.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், கம்யூனிஸ்ட்டுகள் அதை எதிர்த்தோம்.
கேள்வி: இவ்வளவு பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவித்த அழகிரியை ஏன் நீங்கள்கட்சியை விட்டு நீக்கவில்லை?
பதில்: அவர் தி.மு.க.வில் உறுப்பினரே இல்லை. அதாவது அவர் முன்பு உறுப்பினராகஇருந்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினராக தன்னைபுதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த விதிப்படி அவர் உறுப்பினர் பதவியைபுதுப்பித்துக் கொள்ளவில்லை. எனவே அவர் உறுப்பினர் இல்லை. உறுப்பினராகஇல்லாத ஒருவர் மீது கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.?
கேள்வி: வீரப்பனை கோபால் சந்தித்து விட்டாரா என்ன?
பதில்: இன்னும் இல்லை. சந்தித்ததாக வரும் தகவல்கள் பொய்.
கேள்வி: எதனால் இந்த பின்னடைவு?
பதில்: மழையினால் வந்த பின்னடைவு.
கேள்வி: ராஜ்குமார் மகன்கள் பிரதமரை சந்திக்கப் போவதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: நானும் அந்த செய்தியை படித்தேன். தமிழக அரசும், கர்நாடக அரசும் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
கேள்வி: அ.தி.மு.க. கூட்டணிகள் நடத்திய பெரியார் விழா பற்றி...?
பதில்: அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட விழா. சென்ற ஆண்டு பெரியாரைபற்றி சிந்திக்காதவர்கள் எல்லாம் இந்த ஆண்டில் விழா எடுத்தால் என்னவாம்.
கேள்வி: மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியில்வன்முறைகள் அதிகம் என்று கூறப்படுகிறதே?
பதில்: வன்முறைகள் அதிகம் என்பது உண்மை. மறுப்பதற்கில்லை.
கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் பஸ் கட்டணம் உயருமே?
பதில்: இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை தான். ஆனாலும்,தமிழகத்தில் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றார்முதல்வர் கருணாநிதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications