28-ம் தேதி பந்த்தை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
பெங்களூர்:
கர்நாடகாவில் இம் மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள பந்த்தை எதிர்த்து கர்நாடகஉயர் நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவ் விருமனுக்களும் இன்னும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனால்கடத்திச் செல்லப்பட்டார். 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர்மீட்கப்படவில்லை.
இதையடுத்து செப்டம்பர் 28-ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த கர்நாடக திரைப்படவர்த்தகச் சங்கம், அபிமானிகள சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த பந்த்தை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த பந்த்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று அந்த மனுக்களில்கோரப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த பந்த் சட்டவிரோதமானது. அரசியலமைப்புச்சட்டத்தின் 21, 22 ஆகிய பிரிவுகளை இது மீறுவதாக உள்ளது. இந்த பந்த்தால் பொதுமக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படமுடியாமல் போகும். கல்விநிலையங்கள் மூடப்படும். பொது மக்களுக்கு மேற்கண்ட அசெளகிரயங்கள் ஏற்படும்அதே வேளையில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் இந்த பந்த் நடத்தப்படஉள்ளது.
ஆகவே, இந்த பந்த்துக்கு தடை விதிக்க கர்நாடக அரசுக்கும், போலீஸ் துறைக்கும்உத்தரவிடவேண்டும் என்று தனது மனுவில் பெங்களூர் நகர வழக்கறிஞர் வாசுதேவாகூறியுள்ளார்.
பந்த்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவிலும் மேற்கண்டகாரணங்களே கூறப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications