கண்டி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஐரோப்பிய யூனியன் முடிவுபு
கொழும்பு:
இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் விசாரித்து அறிக்கைசமர்பிப்பார்கள்.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் குழு தலைவர் ஜான் கஷானாஹான் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி,இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழர் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தலைநகர் கொழும்பில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. மறுபக்கம், தேர்தல் வன்முறைகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் தூப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
இதை விசாரிப்பதற்காக கண்டி மாவட்ட மலைப்பகுதியில் தங்கியுள்ளோம். கண்டியில் நடந்த கலவரம் குறித்து ஆராய முதலில் பாதிக்கப்பட்டவர்கள்மற்றும் போலீஸாரிடம் தகவல்கள் சேகரித்து வருகிறோம்.
இது குறித்துப் போலீஸார் எங்களிடம் கூறுகையில், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலை முன்னிட்டு ஊர்வலம் நடத்தினார்கள்.அப்போது அவர்களது வாகனங்களை, ஆளும் கட்சியான மக்கள் கூட்டணித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.
அங்கு போலீஸார் சென்றவுடன், பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தொண்டர்கள் பக்கத்திலுள்ள ஐ.ஜி.அலுவலகத்தை முற்றுகையிட்டு இச்சம்பவம்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர் என்றார்.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் குழு செய்தித் தொடர்பாளர் பீட்டர் கிராஸ் கூறுகையில், மக்கள் கூட்டணித் தொண்டர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித்தொண்டர்களிடையே கலவரம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் போலீஸார் இந்தச் சம்பவங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து தீர விசாரித்து விரிவான அறிக்கையை, ஐரோப்பிய யூனியன் குழு சமர்ப்பிக்கும் என்றார்.
இதற்கிடையே, தனியார் தேர்தல் பார்வையாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இதுவரை 500 க்கும்மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் குழுவைச் சேர்ந்த74 தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications