"தவம் பலித்தது ..வீரப்பனை நெருங்குகிறார் கோபால்
சென்னை:
ஐந்து நாள் தவத்திற்கு பிறகு வீரப்பனிடம் இருந்து நக்கீரன் கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு சிக்னல் கிடைத்துள்ளது.
வீரப்பன் இருப்பிடம் நோக்கி அவர் காட்டுக்குள் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீரப்பனை சந்தித்து விடுவார் என்றுசென்னையில் நக்கீரன் பத்திரிக்கை அலுவலகம் தகவல் தெரிவித்தது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக கடந்த 20ம் தேதி புதன் கிழமை இரவு நான்காவது முறையாக அரசு தூதர் நக்கீரன் கோபால்காட்டுக்கு கிளம்பினார். கன மழை காரணமாக அவர் தலைமலைப் பகுதியில் தங்கி விட்டார். சத்தியமங்கலம், தாளவாடி காட்டுப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வந்ததால், வீரப்பனிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.
இந்த தாமதம் காரணமாக நக்கீரன் கேபாலால் தொடர்ந்து காட்டுக்குள் செல்ல முடியவில்லை. எந்த திசை நோக்கி வர வேண்டும் என்பதைவீரப்பன் தனது ஆட்கள் மூலம் சொல்லி அனுப்புவான். அந்த சிக்னல் கிடைக்காததால் திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல் கோபால்அங்கேயே முகாம் போட்டு விட்டார்.
இந்நிலையில் திங்கள் கிழமை இரவு சந்தன வீரப்பனிடம் இருந்து கோபாலுக்கு சிக்னல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி முன்னேறி வரும்படிஅவர் கூறியுள்ளான். அந்த திசை நோக்கி நக்கீரன் கோபால் நடைபோடத் துவங்கி விட்டார்.
அந்த இடத்தை அடைந்ததும் வீரப்பனின் கூட்டாளி வந்து கோபாலை, இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேஇதற்கு எப்படியும் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதன் பின்னர் கோபால், வீரப்பனை சந்தித்துப் பேசுவார் என்று சென்னையில்ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் நக்கீரன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications