உகாண்டா நீச்சல் வீரர் மீது கற்பழிப்பு வழக்கு: ஜாமீனில் விடுதலை
சிட்னி:
உகாண்டா நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜோ அத்துஹேரே மீது கற்பழிப்புக்குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கில் அவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் தற்போது 27-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகளில் 199 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமானவீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக சிட்னியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த வாரம் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே 17 வயது பெண்ணைக்கற்பழித்ததாக உகாண்டா நீச்சல் வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 லட்ச ரூபாய் ரொக்க ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இவ் வழக்கு அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications