அஜ்மீர் யாத்ரீகர்களுக்கு டெல்லியில் முகாம்கள்
டெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடக்கும் விழாவுக்கு வரும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் யாத்ரீகர்களுக்காக டெல்லியில் சிறப்பு முகாம்கள்அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அஜ்மீர் ஷெரீப் பகுதியில் வருடந்தோறும் முஸ்லீம் துறவி முகைதீன் பெயரில் விழா நடக்கும். இது அவர் இறந்த நாளைக் குறிப்பதாகும். இந்த வருடம் 788வது முறையாக இந்த விழா நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் பலர் அஜ்மீர் செல்வர்.
அவர்களுக்குப் பயன்படும் வகையில் டெல்லி செங்கோட்டை அருகே இந்த முகாம்கள் அமைக்கப்படுகிறது. முகாம்களின் தொடக்க விழாவைசெவ்வாய்க்கிழமை கவர்னர் விஜய் கபூர் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், துறவி முகைதீன் ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் பெயரில் நடக்கும் இந்த விழாவில் அனைத்து மதத்தினரும்கலந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு பயன்படும் வகையில் இந்த முகாம்கள் அமைக்கப்படுகிறது என்றார்.
டெல்லி அர்ஸ் கமிட்டி இங்கு தங்கும் யாத்திரிகர்களுக்கு அனைவரும் அனைத்து வகையான வசதிகளும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
டெல்லி ஹஜ் கமிட்டி சேர்மன் அனிஸ் துரானி கூறுகையில், இந்தியாவுக்கு முதன்முதலில் வந்த முஸ்லீம் துறவிகளில் முகைதீன் மிக முக்கியமானவர். அவர்இறந்தநாள் விழா என்றாலும், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டால் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்று நம்புகின்றனர். மேலும் முகைதீன் இந்தியாவில் மனிதநேயம்மற்றும் நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தவர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications