பங்காரப்பா ஆட்சியில் தமிழர்கள் பட்ட பாடு
பெங்களூர்:
பங்காரப்பா.... நினைவிருக்கிறதா. யார் மறந்தாலும் இவரை கர்நாடகத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். இவரதுஆட்சியில் தான் கர்நாடக்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.
காவிரிப் பிரச்சனையைக் காரணமாகக் காட்டி கர்நாடகத்தில்1991ம் ஆண்டு வன்முறை ஆரம்பித்தது. அப்போதுகர்நாடகத்தில் முதல்வராக இருந்த பங்காரப்பாவுக்கு தனது காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட பிரச்சனை.
பதவியை தக்க வைக்க வேண்டிய நிலையில் இருந்த அவருக்கு அல்வா கிடைத்தது மாதிரி கிடைத்தது காவிரிபிரச்சனை. ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறினார். விளைவு, கர்நாடகம் முழுவதும் தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அரசு நிர்வாகம் அலட்சியமாய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது.
இதனால், பங்காரப்பாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே நல்ல அரசியல் அறுவடை கிடைத்தது.
அதிலிருந்து பங்காரப்பா என்றால் தமிழர்களுக்கு நரம்புகளில் மின்சாரம் பாய்வது வழக்கம். இப்போது அரசியலில்காணாமல் போய்விட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பங்காரப்பா. மீண்டும் ஒரு அரசியல் வாழ்க்கைதேவைப்படுவதால் சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருந்தார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட இவரை முதல்வர் கிருஷ்ணா அரசியல்ரீதியில் ஓரம் கட்டியேவைத்திருக்கிறார். இதனால், கிருஷ்ணாவுக்கு எந்த வகையிலாவது தொல்லை தர வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளபங்காரப்பாவுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிருஷ்ணாவின் அரசு இந்த பந்தை நடத்த வேண்டாம் என கோரி வந்தாலும் அவரது கட்சியிலேயே இருந்துகொண்டு கர்நாடக பந்துக்கு ஆதரவு என்று கிளம்பியுள்ளார் பங்காரப்பா.
இதனால், இந்தப் பிரச்சனையை தமிழர்களுக்கு எதிராக பங்காரப்பா திருப்புவாரோ என்ற அச்சம்தமிழர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications