என்னை ஏன் கைது செய்யவில்லை: மூப்பனார் கேட்கிறார்
சென்னை:
சிறை நிரப்பும் போராட்டம் மூலம் த.மா.கா. ஒரு உயிரோட்டம் உள்ள கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது என்று தமாகா தலைவர்ஜி.கே.மூப்பனார் தெரிவித்தார்.
சிறை செல்வோரின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக பல இடங்களில் கைதானவர்களை போலீசார் விடுவித்துவிட்டனர். அதை எதிர்த்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் போலீசாரோடு கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை இரவு மூப்பனார் அளித்த பேட்டி:
மக்கள் பிரச்சனைகளுக்காக த.மா.கா. நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் கடவுள் அருளால் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. மாநிலம் ழுவதும் ஒன்றரை லட்சம் பேர் கைதாகியுள்ளனர். இதற்காக த.மா.காவினருக்கு என் நன்றிகள்.
இவ்வளவு பெரிய போராட்டத்தில் சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல், காந்திய வழியில் அமைதியாக முடிந்துள்ளது என்பதில்இருந்து த.மா.காவின் கலாச்சாரம் வெளிப்பட்டுள்ளது.
எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, போராட்டத்திற்கு முக்கிய காரணமானவர்களை மட்டும் கைது செய்வதாக கூறிபோலீசார் செயல்பட்டுள்ளனர்.
அப்படி முக்கியக் காரணமானவர் என்றால், நான் தான் இந்த போராட்டத்தையே அறிவித்தவன். அதனால் என்னை தான் முதலில்கைது செய்ய வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
பொதுமக்களுக்கு பிரச்சனைகள் என்றால் த.மா.கா. துணை நிற்கும் என்பதை நிரூபித்துள்ளோம்.
அதேபோல் பொதுமக்களும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளனர். இதன் மூலம் த.மா.கா. ஒரு உயிரோட்டள்ள கட்சிஎன்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம். த.மா.காவும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
அரசு உடனடியாக நாங்கள் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்காக அவகாசம் தருவோம்.தேவைப்பட்டால் மீண்டும் போராடுவோம். அதற்கு மதச்சார்பற்ற கட்சிகளை அழைப்பது பற்றி பின்னர் முடிவு செய்வோம்.
இப்போராட்டம் வெற்றி பெற ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். மற்ற தலைவர்கள் கி.வீரமணி,ஜெகவீரபாண்டியன், ஜி.ஏ.வடிவேலு போன்றவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தினர். அவர்களை போலீசார் கைது செய்துவிடுவதாக மிரட்டியது கடுமையான செயல் என்றார் மூப்பனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications