வீரப்பனுக்கு போன 30 கோடி ரூபாய்- அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை:
கடந்த ஜூலை மாதம் 30 -ம் தேதி வீரப்பனால் கடத்தப்பட்டார் ராஜ்குமார். ராஜ்குமார் கடத்தப்பட்டதில் இருந்து தவிப்பில்இருக்கும் தமிழக, கர்நாடக அரசுகள் அரசு தூதராக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை அனுப்பினர்.
மூன்று முறை வீரப்பனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. நான்காவது முறையாக 27-ம் தேதி 5-வது கேஸட்வந்திருக்கிறது ராஜ்குமாரிடமிருந்து (வீரப்பனிடமிருந்து).
இன்னும் பேச்சுவார்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரி அறுபது நாட்கள் காட்டுக்குள் நடப்பது தான் என்ன? என்று விசாரிக்கஆரம்பித்தோம். நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.
வழக்கமாக காட்டிற்குள் தனக்கு கடுமையான பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் எதாவது ஒரு நபரை கடத்தி பணத்தைவசூலித்துக்கொண்டு பின் பத்திரமாக அனுப்பி வைப்பது தான் வீரப்பன் பாணி. இது வரை கடத்தப்பட்ட பலரும் பணப் பிரச்சனைசெட்டிலானவுடன் மிக பத்திரமாகவே வீரப்பனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேமாதிரி, கடத்தப்பட்ட எவரையும் இருபத்தைந்து நாட்களுக்கு மேல் காட்டுக்குள் வைத்துக்கொண்டதில்லை வீரப்பன். இந்தமுறை கடத்தப்பட்டுள்ள ராஜ்குமார் தான் மிக அதிகமான நாட்கள் காட்டிற்குள் இருப்பவர். இது ஒரு ரெக்கார்ட் என்று கூடசொல்லலாம்.
ராஜ்குமார் கடத்தப்பட்டவுடனேயே பணம் தான் இதில் முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்தன தமிழக, கர்நாடக அரசுகள்.வீரப்பனுடனான பேச்சுவார்த்தைகளிலும் பணம் குறித்து பேசப்பட்டது.
பின்னர் பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது. பணம் எந்தளவுக்கு காட்டிற்குள்கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல்தான் நம்மை தலைசுற்ற வைக்கிறது.
கிட்டதட்ட முப்பது கோடிரூபாய் வரை பணமாகவும், தங்கக் கட்டிகளாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விஷயம்தெரிந்தவர்கள். கொடுக்கப்பட்ட பணம், தங்கம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவில் இருந்து அனுப்பப்பட்டு தமிழகத்தில் வடமாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர் மூலமாக காட்டிற்குள் வீரப்பனிடம் சென்றடைந்து விட்டதாகச் சொல்ல்லப்படுகிறது.
அந்தப்பணத்தையும், தங்கத்தையும் உடனே ஆயுதங்களாக மாற்ற தமிழ்தீவிரவாதிகள் தரப்பிலிருந்து முயற்சிகளும் நடக்கின்றன.ஏற்கனவே ஆயுதங்களை காட்டிற்குள் குவித்து வைத்துள்ள இந்தத் தீவிரவாதிகள் மேலும் ஆயுதங்கள் வாங்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
கன்னட திரையுலகம், ராஜ்குமார் குடும்பத்தினர் தவிர இரு மாநிலத்திற்கும் பொதுவான முக்கிய திரைப்பட பிரமுகர் ஒருவரும்தான் இவ்வளவு பணத்தை காட்டுக்குள் அனுப்பியிருக்கிறார்களாம்.
இந்த முறை ராஜ்குமார் கண்டிப்பாக திரும்பிவருவார் என்று தமிழக அதிகாரிகள் உறுதியாகச்சொல்வது கூட, வீரப்பன் கேட்டபணத்தை கொடுத்தாகிவிட்டது என்பதன் அடிப்படையில்தானாம்.
அதே நேரத்தில் இன்னும் காட்டிற்குள்ளிருக்கும் வீரப்பனின் கோபம் குறையவில்லை என்கிறார்கள். கோபத்திற்கு காரணம், தான்விடுவிக்கச் சொன்ன கைதிகள், தீவிரவாதிகள் எவரையும் விடுவிக்காமல் இரு அரசுகளும் ஏதோ நாடகமாடிக்கொண்டிருக்கின்றன என்றே நினைக்கிறாரானாம் வீரப்பன்.
தொடர்ந்து கவலையில் இருக்கிறது தமிழக அரசு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications