தசரா நேரத்தில் பந்த் வேண்டாம்: ராஜ்குமார் பேசிய கேஸட் சென்னை வந்தது
சென்னை:
தசரா நேரத்தில் பந்த் நடத்த வேண்டாம் என்று காட்டிலிருந்து நடிகர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து பேசிய கேசட் சென்னைக்கு புதன்கிழமை வந்துள்ளது.
ராஜ்குமார் எப்போது வருவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நக்கீரன் நிருபர் சுப்பு மூலம் புதன்கிழமை காலைசென்னை வந்து சேர்ந்துள்ளது ஒரு கேசட்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரசுத்தூதர் கோபால், தனது நிருபர்களுடன் வீரப்பனைச் சந்தித்தார். பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே, தயாராகவைத்திருந்த கேஸட்டைக் கொடுத்தாராம் வீரப்பன். அந்தக் கேஸட்டில் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமேபேசியுள்ளார்.
அது குறித்த விவரமாவது:
தசரா திருவிழா நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பந்த் நடத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தானது. பந்த் நடத்தாதீர்கள். அந்த சாமூண்டிஸ்வரி அருளால்நான் விரைவில் காட்டிலிருந்து வருவேன்.
மக்களுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பந்த் போன்ற எந்த நடவடிக்கையும் இப்போது தேவையில்லை. தயவுசெய்து பந்த்தைக் கைவிடுங்கள்.நான் இங்கே நன்றாக இருக்கிறேன். பர்வதம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார் ராஜ்குமார்.
தற்போது இந்தக் கேஸட் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டிலிருந்து ராஜ்குமார் எப்போது வருவார் என்று ஆவலோடுகாத்திருக்கிறது தமிழக அரசு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications