சென்னை - பெங்களூர் ரயிலை கவிழ்க்க சதி
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்த ரயிலைக் கவிழ்க்க செய்திருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூர் வரும் ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கும், பாச்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் உள்ள இரும்புக் கம்பிகள்அகற்றப்பட்டிருந்தன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த கேங்மேன் அதைக் கண்டுபிடித்துவிட்டார். உடனடியாக அவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது அங்கு அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் ஒன்று நடமாடிக் கொண்டிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் வருவதைக் கண்டதும் அந்த ஆசாமிகள் தலைமறைவாகி விட்டனர். ரயில்களைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் நாசவேலையில் ஈடுபட முயன்றதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதே நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு சரக்கு ரயிலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் பெங்களுருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால், இந்த சதிவேலை குறித்து உடனடியாக சென்னை ரயில் நிலையத்துக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூர் புறப்படவிருந்தரயில்கள் நிறுத்தப்பட்டன.
மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய்ப் படையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது.
ஐ.ஜி.உத்தரவு:
ரயில்களைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் நாசவேலைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர்வரும் அனைத்து ரயில்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும்படி ரயில்வே ஐ.ஜி.திலகவதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலிருந்து பெங்களூர் வரும் அனைத்து ரயில்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications