கோயபல்ஸ் பிரச்சாரத்தில் மூப்பனார்: திமுக கண்டனம்
சென்னை:
கருணாநிதி சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறி கோயபல்ஸ் பிரச்சாரத்தில் மூப்பனார் ஈடுபட்டுள்ளார் என்று திமுக கடுமையாக கண்டித்துள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
ஆறு மாதம் என்ன ஆறு வருசம் சிறையில் இருக்கத் தயார் என்று தமாகா தலைவர் மூப்பனார் கூறியுள்ளார். தமாகா மறியல் செய்தால் ஆறு மாதம்சிறை தண்டனை என்று முதல்வர் எங்கே யாரிடம் தெரிவித்தார்.
25ம் தேதி தமாகா போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மறியல் செய்தால் அதற்குரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது மறியலில் ஈடுபட்ட போராட்டங்களில் ரிமாண்ட் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று மூன்றுமாதம், ஆறுமாதம் என்று தண்டனை பெற்றுள்ளோம் என்று தான் முதல்வர் தெரிவித்தார்.
தமாகாவினரை ஆறு மாதம் சிறையில் வைக்கப் போவதாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தண்டனை வழங்குவது என்பது நீதிபதியின் பொறுப்பாகும்.ஒரு முதல்வரால் சிறை தண்டனையெல்லாம் வழங்க முடியாது. இந்த சிறிய விஷயத்தை கூட புரிந்து கொள்ளாமல் முதல்வர் மீது சேற்றை வாரி இறைக்கும்முயற்சியிலே தமாகாவினர் ஈடுபடுவது முறைதானா?
மேலும் மூப்பனார் திருப்பூரில் பேசும்போது முதல்வர் ரொம்ப பேசுகிறார். திமுகவால் தான் தமாகா வெற்றி பெற்றது என்று கருணாநிதிகூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக வால் தான் தமாகா வெற்றி பெற்றது என்பது உலகறிந்த உண்மை என்ற போதிலும், அதைக் கூடகருணாநிதி எங்கேயும் சொல்லிக் காட்டியது கிடையாது.
ஆனால், மூப்பனார், முதல்வர் சொல்லாததை எல்லாம் சொல்லிக் கொண்டு அதற்குப் பதில் கூறும் முயற்சிகளிலே ஈடுபடுகிறார். ராஜீவ் காந்திசிந்திய ரத்தத்தால் அதிமுக வெற்றி பெறவில்லை என்று உண்மையாக மதுரையிலே பேசியது ஜெயலலிதா அம்மையார் தான். அந்த ராஜீவ்மரணத்தையே மறந்து விட்டு இப்படி கருணாநிதி மீது பழி போடலாமா?
இப்படி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறிக் கொண்டு அதற்குப் பதில் கூறுவது என்ற முறையில் சேற்றை வாரி இறைப்பதற்குப் பெயர் தான்கோயபல்ஸ் பிரச்சாரமா என்று மூப்பனாரை கேட்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications