திண்டிவனத்தில் அரசு பஸ் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திண்டிவனம் அருகே அரசு பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

முகமூடி அணிந்து வந்த விடுதலை சிறுத்தையினர் தான் இந்தசெயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திண்டிவனத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்றுசென்று கொண்டிருந்தது. பஸ்சில் குறைந்த அளவு பயணிகளேஇருந்தனர்.

அந்த பஸ் ஆதனப்பட்டுக்கும் சிறுநாவலூருக்கும் இடையேவரும் போது சாலையில் மரங்களை வெட்டிப் போட்டும்,கற்களை போட்டும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால்பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

அப்போது சாலையின் ஓரத்தில் மறைந்திருந்த ஒரு கும்பல்முகமூடி அணிந்த நிலையில் பஸ்சை சுற்றியது. டிரைவர்,கண்டக்டர் மற்றும் பயணிகளை இறங்கச் சொல்லி விட்டு,பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், தீ வைத்தகும்பல் தப்பி ஓடிய பாதையை, அவர்களின் கால் தடயங்களைவைத்தே தொடர்ந்தனர். அந்த தடயங்கள் கீழ்சித்தாவூர்கிராமத்தில் முடிந்தது.

ஆனால், அங்கு யாரும் இல்லை. ஊரே காலியாக இருந்தது.விசாரணையை தீவிரமாக்கிய போலீசார், பஸ்சை எரித்தவர்கள்விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் என்று கண்டுபிடித்தனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரை குண்டர்சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர். அதைக் கண்டித்துஇந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+