கோவையில் தகவல் தொழில்நுட்ப கண்காட்சி
கோவை:
கோவையில் தகவல் தொழில்நுட்பம் குறித்த 3 நள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிநடக்கிறது.
கோவையில் வரும் அக்டோபர் 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தகவல்தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்கிறது. "கனெக்ட்கோயத்தூர் 2000 என்ற இந்தக் கருத்தரங்கு சுகுணா ஆடிட்டோரியத்தில்நடைபெறும்.
இதில், தமிழக அரசு தகவல் தொழில்நுட்பச் செயலர் டி. பிரகாஷ்உட்பட விப்ரோ,என்ஐஐடி, போன்ற நிறுவனங்களின் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய தொழில்கள் கூட்டமைப்புஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கில், "ஈ வர்த்தகம் மற்றும் அதன்பயனுள்ள சேவைகள் என்பது பற்றி விவாதிக்கப்படும். இது போன்ற கருத்தரங்குகள்கொச்சி, புனே மற்றும் மைசூரில் நடைபெறவுள்ளன.
கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி: இதேபோல, செப்டம்பர் 30ம் தேதி முதல்அக்டோபர் 2 ம் தேதி வரை கோவையில் கட்டுமானப் பொருட்கள் குறித்த கண்காட்சிநடக்கிறது.
இந்தக் கருத்தரங்கில், கட்டடங்கள் கட்டுவதற்கானப் பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள், மரச் சாமன்கள் ஆகியவை இடம் பெறுகிறது. ஓட்டல் ரத்னா ரிஜென்டில்நடக்கும் இந்தக் கண்காட்சிக்கு , 90 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications