ராவுக்கு கிடைத்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பா.ஜ.க.
டெல்லி:
ஜார்க்கன்ட் முக்தி மோட்சா எம்.பி.க்களுக்கு பலகோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்குக் கிடைத்ததீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று பாரதிய ஜனதா கட்சி வர்ணித்துள்ளது.
1991-ம் ஆண்டு முதல் 1996 வரை இந்தியப் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். 1993 ம் ஆண்டு ஜூலை மாதம் 28 ம் தேதி நரசிம்மாராவுக்குஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நரசிம்மாராவ் சார்பில் ஜார்கன்ட் முக்தி மோட்சா எம்.பிக்களுக்கு லஞ்சம்கொடுக்கப்பட்டது என்று வழக்குத் தொடரப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி பாரியோக் இவ்வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருப்பதால் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங்குற்றவாளிகள் என்று தீர்ப்புக் கூறினார்.
இந்தத் தீர்ப்பு குறித்து பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச்செயலாளர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், முன்னாள் பிரதமர் ஒருவர் லஞ்ச வழக்கில்குற்றம்சாட்டப்பட்டு தண்டனைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. பணம் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இதுநல்ல பாடம் என்றார்.
பாரதிய ஜனதாக் கட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஜார்க்கன்ட் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்நரசிம்மராவ் குற்றவாளிதானா என்பது குறித்து முழுத் தீர்ப்பும் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நேரடியாகலஞ்சம் கொடுத்தாரா அல்லது பிறர் மூலம் லஞ்சம் கொடுத்தாரா என்பது குறித்து முழு தீர்ப்பு வந்தபின்தான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மிகச் சிறந்த நிர்வாகத் திறமை வாய்ந்தவர். அவர்எனது நல்ல நண்பரும் கூட என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications