சைக்கிள் போட்டி: 3-வது தங்கம் வென்றார் ஹாலந்து வீராங்கனை ஸிஜ்லார்டு
சிட்னி:
சைக்கிள் போட்டியில் பெண்களுக்கான டைம் டிரையல் போட்டியில் ஹாலந்துவீராங்கனை லியோன்டியன் ஸிஜ்லார்டு தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் பந்தைய தூரத்தை 42 நிமிடங்களில்கடந்து தங்கம் வென்றார். சிட்னி ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டியில் அவர் வென்றமூன்றாவது தங்கம் இது.
ஏற்கெனவே ரோடு ரேஸ் மற்றும் 3,000 மீட்டர் பர்சியூட் பிரிவுகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் 16 ஆண்டுகளுக்கு முன் தான்அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் ஒரே ஒலிம்பிக்கில் மூன்றுதங்கப் பதக்கங்களை வென்று ஸிஜ்லார்டு சாதனை படைத்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடந்த இப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேரி ஹோல்டன்வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை ஜியான்னி லோங்கோ வெண்கலப்பதக்கமும் வென்றனர்.












Click it and Unblock the Notifications