சந்திரிகா வன்முறையைத் தூண்டுவதாக கூறுகிறது தமிழ் கட்சி
கொழும்பு:
இலங்கையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பதற்காக, அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆயுதங்கள் கொடுத்து வன்முறையைத் தூண்டி ஆதாயம் காண,அதிபர் சந்திரிகா தலைமையிலான கட்சிகளின் ஆளுங்கட்சிக் கூட்டணி என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள பல நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஆனந்தசங்கரிகூறியிருப்பதாவது:
வடக்கு யாழ்ப்பாணத்தில் மொத்தம் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் உள்ள கியாட் தொகுதியில் 1994 ம் ஆண்டு நடந்த தேர்தலில்ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணிக் கட்சி மூலம் வன்முறையைத் தூண்டி விட்டு தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி மூலம்தான் சந்திரிகா கடந்த ஆறு வருடங்களாக கொழும்பில் ஆட்சி புரிந்து வந்தார்.
அதே போல் இந்த முறை நடக்கும் தேர்தலிலும் வன்முறையைத் தூண்டி விட்டு வெற்றி பெற சந்திரிகா அரசு முயல்கிறது. இதற்காக ஈழம் மக்கள்ஜனநாயக கூட்டணி யை வைத்து பல முகாம்களையும், தேர்தல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது.
இதற்கான அனைத்து உதவிகளையும் சந்திரிகா அரசு, ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணிக் கட்சிக்கு அளித்து வருகிறது. இதனால் வடக்குயாழப்பாணத்தில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்சனையைத் தேர்தல் பார்வையாளர்கள் தலையிட்டுத்தீர்த்து வைக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அனந்தசங்கரி.
சந்திரிகாவின் நவீன பிரச்சாரம்:
நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சந்திரிகா நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்துஏற்படும் என்பதால் அவர் தங்கியுள்ள அரசு இல்லமான டெம்பிள் டீரிஸில் தங்கிக்கொண்டே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அவர் வீட்டில் இருந்து கொண்டே ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்கள்வீட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அக்டோபர் 10 ம் தேதி நடக்கும் பொதுத்தேர்தலுக்காக அதிபர் சந்திரிகா இதுவரை பொதுக்கூட்டங்களிலோ அல்லது பேரணிகளிலோ கலந்துகொள்ளவில்லை. முக்கிய தேர்தல் பிரச்சாரங்களை பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமசிங்கே தான் மேற்கொண்டு வருகிறார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications