முதியோர் கல்விக்காக ரூ 750 கோடி செலவு!
திருச்சிராப்பள்ளி:
முதியோர் கல்வித் திட்டத்திற்காக மத்திய அரசு 1992 ம் ஆண்டு முதல் இதுவரை ரூ 750 கோடி வரை செலவழித்துள்ளது என்று தேசிய முதியோர் கல்வித்திட்ட இயக்குநர் விஷ்ணுகுமார் திருச்சியில் சனிக்கிழமை கூறினார்.
தமிழகத்தில் முதியோர் கல்வித் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்தியமைக்காக திருச்சி கலெக்டர் மூர்த்தி, திருநெல்வேலி கலெக்டர் தனவேல்,புதுக்கோட்டை கலெக்டர் சந்திரகாந்தி ஆகியோருக்கு ஆதிசேஷய்யா விருது வழங்கப்பட்டது.
இவர்களுக்கு திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் விஷ்ணு குமார் விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா முழுவதிலும் 559மாவட்டங்களில் முதியோர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
29 மாவட்டங்களிலிருந்து 84 மில்லியன் மக்கள் இதுவரை இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மூன்று கட்டங்களாகஇத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ 750 கோடி செலவழித்துள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications