கையெழுத்து இயக்கம் நடத்துகிறது த.மா.கா.
சென்னை:
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றுஜி.கே.மூப்பனார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கூட்டி, சாமானிய ஏழை எளிய மக்களின் மேல் தாள முடியாத சுமையினை ஏற்றி வைத்திருக்கும் மத்தியஅரசையும், இந்த அநியாய விலை உயர்வை நியாயப்படுத்துகின்ற மாநில அரசையும் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தமிழகத்தின் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம், பொதுமக்களது எதிர்ப்பினை மத்திய மாநில அரசுகளுக்குஎடுத்துக் காட்ட தமாக இந்த முயற்சியை மேற்கொள்கிறது.
அக்டோபர் 4ம் தேதி அல்லது 5ம் தேதி அப்பகுதி மக்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் தொகுதியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் இடங்களில்பொதுமக்கள் கையெழுத்து பெறப்படும். அந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுக்களை தமிழக கவர்னரிடம் தமாகா ஒப்படைக்கும்.
தமாகா முன்னணியினர் அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற வேண்டும் என்றும், இதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள்ஆதரவு தர வேண்டும் என்றும் மூப்பனார் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications