புடின் வரவால் இந்திய, ரஷிய உறவு மேம்படும்
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புடினின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே புதிய உறவு மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த எட்டு வருடங்களில் ரஷிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1993-ம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் இந்தியாவந்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி உயர் மட்ட அளவிலான சந்திப்புகளுக்கு ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இது நடைமுறையில்கடைப்பிடிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டுக்குப் பிறு இரு தரப்பு தலைவர்களும் 94 மற்றும் 97 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே சந்தித்துள்ளனர்.94-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், 97-ல் தேவெ கெளடாவும் ரஷியா சென்றனர்.
உலக அளவில் தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலையில், புடினின் வருகை இரு நாடுகளின் உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் முன்பு போலவே சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகரஷிய அரசியல் ஆய்வாளர் ரியபோவ் கூறியுள்ளார்.
புடினுடன் ரஷிய துணை பிரதமர் இல்யா கிளபனோவ் உள்ளிட்ட மிகப் பெரிய குழுவே இந்தியா வருகிறது.
சிவில் மற்றும் கிரிமனில் வழக்குகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றுதெரிகிறது.
இதுதொடர்பாக அறிவியல், தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு, இந்திய மாநிலங்களுக்கும், ரஷியாவிலுள்ள பல பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்பாடுகளும் புடின் வருகையின்போது எட்டப்படவுள்ளன. மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications