இன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புடின்
டெல்லி:
ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் 4 நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை மாலைடெல்லி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிப்பார். இந்த வரவேற்புக்குப்பிறகு மகாத்மா காந்தி சமாதியில் புடின் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்துவார்.
பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் ஹோட்டல் மெளர்யாஷெரட்டனில் பேச்சு நடத்துகிறார். செவ்வாய்க்கிழமை புடினுக்கு டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது.
புடினுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் சிறப்பு விருந்து ஒன்றையும் அளிக்கிறார்.புதன்கிழமை அவர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.அதற்கு முன்பாக காலை புடினை, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திசந்தித்துப் பேசுகிறார்.
பிற்பகலுக்கு மேல் ஆக்ராவிற்குச் செல்கிறார் புடின். பின்னர் அங்கிருந்து மும்பைசெல்கிறார். அங்கு இந்தியத் தொழிலதிபர்களுடன் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின்னர் ரஷியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
புடினின் இந்திய பயணத்தின்போது 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்கையெழுத்தாகவுள்ளன.
முன்னதாக தனது இந்திய பயணம் குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் புடின்பேசுகையில், இந்தியாவும், ரஷியாவும் நீண்ட கால தோழர்கள். இயல்பாகவே இருநாடுகளுக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாடவுன் நட்பு கொள்வதில்ரஷியா பெருமைப்படுகிறது.
இரு நாடுகளும் இணைந்து சர்வதேச அளவிலான தீவிரவாதத்தை ஒடுக்க பாடுபடும்.இரு நாடுகளுக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளால் பிரச்சினை உள்ளது. இதைஇருநாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ளலாம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications