அண்ணாமலையின் பேச்சில் தெரியவருவது என்ன.. வழக்கம் போல் திமுக எதிர்ப்பு.. ஆனால் பெரிய அஜெண்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் கட்சி ஆரம்பித்தாலும், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் எடுக்கும் முதல் வியூகமே திமுக எதிர்ப்பு தான். திராவிட சிந்தனை காலி செய்யாமல் இங்கு எந்த மாற்றமும் நடக்காது என்று நினைக்கும் கட்சிகள், அதற்கு தடையாக இருப்பதாக நினைப்பது திமுகவைத்தான். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும், 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு வேப்பாங்காய் ஆக கசந்தது திமுக தான் . அந்த வழியில் தான் அண்ணாமலை பயணிக்க போகிறார் என்பது அவரது பேச்சில் தெளிவாக தெரியவருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தவெக தலைவர் விஜய்யின் முழு நோக்கமும் திமுக எதிர்ப்பு மட்டுமே.. அதற்காக அதிமுக என்ற இயக்கத்தை மொத்தமாக தன் வசப்படுத்தவும் தயாராகவே இருக்கிறார். மக்கள் செல்வாக்கில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, வெறும் இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்ததது விஜய் மட்டும் தான். விஜய்க்கு பெண்கள், குழந்தைகள் ரசிகர்கள் மிக அதிகம். தமிழ்நாட்டில் டாப் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் அரசியலில் நேரடியாக இறங்கி, சினிமாவை போலவே அரசியலையும் அணுகி, தனது ரசிகர்களையும், தனது ரசிகர்களின் குடும்பத்தினரையும் ஓட்டுப்போட வைத்து ஜெயித்துவிட்டார்.

As usual Annamalai s speech featured opposition to the DMK but with a larger agenda


எம்ஜிஆருக்கு கூட சாத்தியமாகவில்லை

இப்படி ஒரு வெற்றி எம்ஜிஆருக்கு கூட சாத்தியமாகவில்லை.. எம்ஜிஆர் 1977ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வருடம் திமுகவில் இருந்தார். அன்றைய சூழல் என்பது முற்றிலும் வேறு. அப்போது படிப்பறிவு மிக குறைவு.. மக்கள் நிஜமாக சூப்பர் ஹீரோவாக எம்ஜிஆரை நம்பினார்கள். அதே வரலாறு 2026ல் திரும்பியது மிகவும் ஆச்சரியமானது.. ஏனெனில் ஆட்சியில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட அதிமுக, திமுக சினிமா நட்சத்திரங்களை கடவுளுக்கு சமமாக நினைத்து புகழ்வதை, கொண்டாடுவதை தடுக்கவே இல்லை.. இன்னும் சொல்லப்போனால் மக்களை அரசியல்படுத்தும் முயற்சியில் அவர்கள் வெற்றிபெறவில்லை.. அதனால் எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஹீரோவாக திரையில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் ஜெயிக்க இதுவே காரணம்.. விஷயத்திற்கு வருவோம்.

திமுக தான் வேப்பங்காய்

திராவிட ஆட்சிக்கு முடிவு கட்ட நினைத்த தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவிற்கு இந்த 60 ஆண்டுகளில் வேப்பங்காய் போல் இருந்தது திமுக தான். திமுக இருக்கும் வரை திராவிட சிந்தனை தமிழ்நாட்டில் இருக்கும் என்பதால், இங்கு ஆரம்பிக்கப்பட்ட அத்தனை இயக்கங்களும் திமுகவை எதிர்த்தே ஆரம்பிக்கப்பட்டன.

விஜய்க்கு உள்ள பாஜக ஆதரவு

எம்ஜிஆர் தொடங்கி, கடைசியாக கட்சி ஆரம்பித்து ஜெயித்த விஜய் வரை எல்லாருமே திமுகவை எதிர்த்தே அரசியல் கட்சியை ஆரம்பித்தனர். திமுகவிற்கு எதிராக எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது, அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் அவரை ஆதரித்தது. கிட்டத்தட்ட அதேபோன்ற நிலை தான் விஜய் தற்போது கட்சி ஆரம்பித்த போதும் நடந்திருப்பதாக சொல்கிறார்கள். மத்தியில் உள்ள பாஜகவின் ஆதரவு மறைமுகமாக உள்ளதாகவும், அதுதான் விஜய் ஆட்சிக்கு வர காரணம் என்றும் திமுக நம்புகிறது.

அண்ணாமலை பேச்சு என்ன

விஜய்யை வைத்து அதிமுகவை காலி செய்து விஜய், திமுக என்று முதலில் மாற்றுவதுடன், அதன்பின்னர் திமுகவை அழித்துவிட்டு, அங்கு வருவது தான் பாஜகவின் இலக்கு என்கிறார்கள் திமுகவினர். பாஜகவில் இருந்து விலகி வி த லீடர் என்ற அமைப்பை ஆரம்பித்த அண்ணாமலையும், திமுக எதிர்ப்பில் தான் பயணிக்க போவதாக அறிவித்துள்ளார். நேற்று பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசுகையில், ஆணவத்துடன் யார் ஆட்சி செய்தாலும் இந்த மண் அவர்களை விடாது என்பதற்கு கடந்த தேர்தல் சாட்சி என்று கூறினார். அதேபோல் தவெகவின் ஆட்சியையையும் வெகுவாக பாராட்டினார். இதனை பார்க்கையில் அவரும் திமுக எதிர்ப்பையே கையில் எடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

திமுக ஆதரவாளர் கருத்து

இதுபற்றி திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், இதுவரை போகிற போக்கை பார்த்தால், நேற்றைய அண்ணாமலை பேச்சு ஒன்றைதான் குறிக்கிறது.. வழக்கம் போல திராவிட எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு.. விஜய்க்கு டைம் குடுங்கனு மட்டும் சொல்லி நிறுத்திட்டார்.. அவர்களின் திட்டம் ஒன்றுதான்.. தமிழ்நாட்டில் திராவிட அரசியலை அப்புறப்படுத்திவிட்டு அரசியல் சார்பற்ற நிலை vs வலதுசாரி அரசுக்கும் இடையிலான வேறுபாடு ஆக மாற்றுவது.. விஜய் ரசிகர்களை வைத்து அனைத்து உரிமைகள் பறிப்போவதையும் உளவியலாக நார்மலைஸ் செய்வார்கள் .. பிறகு இதெல்லாம் ஒரு மேட்டரா என்று மக்கள் மனம் நார்மலைஸ் ஆனப்பின்பு ஆர்எஸ்எஸ் பாஜக பட்டுக்கம்பளத்தில் வலம்வரும். இடதுசாரிகள், தலித் இயக்கங்கள் காணாமற்போனதாக ஆக்கப்படும்.

நரேட்டிவ் எப்படி இருக்கும்

நரேட்டிவ்: விஜய் & அண்ணாமலை சமகாலத்தில் சுயமாக அரசியலுக்கு வந்தவர்கள் என்று புரஜக்ட் செய்து உதயநிதியை வாரிசு அரசியல் என்ற ஒற்றை புள்ளியில் சுருக்கி தமிழ்நாட்டை டெல்லிக்கு அடிமை ஆக்குவது. காங்கிரஸ் இதை வேடிக்கை பார்க்கும்.. ஏன் என்றால் அவர்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுதான்" இவ்வாறு திமுக ஆதரவாளர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+