லீசுக்கு வாங்கிய நிலம் அபேஸ்.. திமுக மாஜி தா.மோ.அன்பரசன் மீது பரபர புகார்! ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி, எவ வேலு, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்களும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் அலுவலகத்துக்காக தொழிலதிபர் ராஜேஷ் என்பவரிடம் லீசுக்கு பெற்ற இடத்தை ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அவர் திரும்ப ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவரை அணுகியுள்ளார். அப்போது தேர்தல் அலுவலகம் அமைப்பதற்காக தா.மோ.அன்பரசன் உதவியாளர் ஜெய்சங்கர் மூலம் அந்த இடத்தை லீசுக்கு வழங்குமாறு ராஜேஷ் சோமசுந்தரத்தை அணுகியிருக்கிறார்.

tm anbarasan dmk police

தேர்தல் பணிகளுக்காக தற்காலிகமாக மட்டுமே நிலம் பயன்படுத்தப்படும் என்றும், வாடகை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என கூறி இருக்கிறார். இந்த நிலையில் தேர்தலுக்காக பணிகளுக்காக வழங்கப்பட்ட இடத்தை திரும்ப தரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

தா.மோ.அன்பரசன்

லீஸ் ஒப்பந்தம் செய்யும்போது தவறான தகவல்கள் மற்றும் போலி முகவரி பயன்படுத்தப்பட்டதோடு வாடகைத் தொகையையும் தரவில்லை என குற்றம் சாட்டி இருந்தார் ராஜேஷ். இந்நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி அமைச்சர் அன்பரசன் அழைப்பின் பேரில் அவரை நேரில் சென்று சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் ஒரு வாரத்திற்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என தான் கேட்டும், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இன்று வரை சொத்து ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நில அபகரிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பரங்கிமலை போலீசார் புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்த நிலையில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்குப் பதிவு

கடந்த சில தினங்களாக திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எவ வேலு, தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது என அடுத்தடுத்து திமுக புள்ளிகள் மீது குறி வைத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தாமோ அன்பரசன் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பது திமுக வட்டாரங்களை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரபரப்பில் அறிவாலயம்

தற்போது புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே அமைச்சர் முன்னாள் அமைச்சர் தாமோ அன்பரசனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் சொல்கின்றனர். இதனால் பரபரப்பில் ஆழ்ந்துள்ளன அறிவாலய வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+