ரயில் நிலையத்தை கலவரப்படுத்திய விடுதலை சிறுத்தைகள்
விழுப்புரம்:
சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற ரயிலில் ரிசர்வேஷன் செய்யாமல் ரிசர்வ் பெட்டிகளில் ஏறிய விடுதலைசிறுத்தைகள் அமைப்பினருக்கும் ரயில்வே டிக்கெட் பரிசோதனை அதிகாரி, ரயில்வே கார்டுக்கும் இடையேபிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 150 பேர் அதிகாரிகளைத் தாக்கினர். இதனால் அங்கு பெரும் ரகளைஏற்பட்டது.
சென்னை தம்பரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச்சென்றது. நள்ளிரவு 12.30 மணிக்கு அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தது.
அங்கு 3 பேர் ரிசர்வ் பெட்டியில் ஏறினர். அவர்களைப் பார்த்து சந்தேகப்பட்ட டிக்கெட் பரிசோதகர் அவர்களைவிசாரிக்க ஆரம்பித்தார். மூவரும் சேர்ந்து பரிசோதகரை மிரட்ட ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்த கார்ட் ஜேம்ஸ் அங்கு விரைந்து வந்தார். மூன்று பேரையும் தனது பெட்டியில் வந்து ஏறுமாறு கார்ட்ஜேம்ஸ் கூறினார். அப்போது அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மற்ற இருவரையும் தன்னுடன் வருமாறு ஜேம்ஸ் அழைத்துக் கொண்டிருந்தபோதே, ரிசர்வ் செய்யாத பொதுப்பெட்டிகளில் இருந்த விடுதலைதச் சிறுத்தைகள் அமைப்பினர் சுமார் 150 பேர் சேர்ந்து கொண்டு அவரைத் தாக்கஆரம்பித்தனர்.
சிலர் ரயில் மீது கற்களை வீசினர். நள்ளிரவில் நல்ல தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டுஎழுந்தனர். அங்கு ஒரே களேபரம் நிலவியது.
ஒரு கும்பல் கார்ட் பெட்டிக்குள் புகுந்தது. அங்கிருந்த மின் விசிறி, பல்புகளை அடித்து உடைத்தனர். இதையடுத்துகார்ட் ஜேம்ஸ், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கழிவறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
கலவரத்தில் ரயில் நிலையமே சூறையாடப்பட்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் செங்கல்பட்டு ரயில்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசாரும் ரயில்வே போலீசாரும் விரைந்து வந்தனர்.
ரகளையில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினர். பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கடலூர் மாவட்டத்திலும் பாண்டிச்சேரியிலும் இந்த அமைப்பினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும்தொடர்ந்து மோதல் நடந்து வருவது தெரிந்ததே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications