மயக்கமடைந்த போலீஸ்காரரைக் கண்டுகொள்ளாத "நீதி கட்சி
சென்னை:
புதிய நீதிக் கட்சி ஊர்வலத்தில் மூர்ச்சையடைந்து விழுந்த போலீஸ்காரரை காப்பாற்றஊர்வலத்தினர் யாருமே முன் வரவில்லை.
அந்த போலீஸ்காரரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஜீப்பில் ஏற்றிச் சென்று உடனடியாகமருத்துவமனையில் சேர்த்ததால் போலீஸ்காரர் உயிர் பிழைத்தார்.
புதிதாகப் பிறந்த புதிய நீதிக் கட்சியின் முதல் பேரணி சென்னையில் ஞாயிற்றுக்கிழமைநடந்தது. கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம்முன்புள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் தி.நிகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவிகமிஷனர் கல்யாணசுந்தரம் ஈடுபட்டிருந்தார்.
அவரது ஜீப்பில் தலைமைக்காவலர் கருணாநிதி உள்ளிட்ட காவலர்கள் தயார்நிலையில் இருந்தனர். அப்போது கருணாநிதி திடீரென்று மயக்கமடைந்து மூர்ச்சையாகிவிட்டார். அவரை போலீசார் எழுப்ப யற்சித்தனர். ஆனால், முடியவில்லை.
மாரடைப்பாக இருக்கலாம் என்று கருதி நெஞ்சுப்பகுதியை அழுத்திப் பார்த்தனர்.அப்படியும் கருணாநிதியிடம் சத்தம் இல்லை. ஊர்வலத்தில் வந்த கார்,ஆட்டோக்களை நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கேட்டனர்போலீசார். அவர்கள் மறுத்து விட்டனர்.
ஜீப் இருந்தும் ஓட்ட முடியாத நிலை. மூர்ச்சையடைந்த கருணாநிதி தான் அதற்குடிரைவர். உதவி கமிஷனர் உள்ளிட்ட யாருக்கும் ஜீப் டிரைவிங் தெரியாது.
அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் சப்இன்ஸ்பெக்டர் தேவராஜ் என்பவர் வந்தார்.நிலைமையை அறிந்து தனக்கு ஜீப் ஓட்டத் தெரியும் என்றதும் ஒட்டுமொத்தபோலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
உடனடியாக தலைமைக் காவலர் கருணாநிதியை, போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தக்க சமயத்தில் கொண்டு வந்து சேர்த்ததால் கருணாநிதி உயிர் பிழைத்தார் என்றுமருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications