கோவையில் விரைவில் உள் விளையாட்டு அரங்கம்
கோவை:
கோவையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஓராண்டாக பணிகள் நடைபெறாமல்இருந்த உள்ளரங்க விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்படும். இதற்கானஇடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் உறுப்பினர் செயலர் நிரஞ்சன் மார்டி தெரிவித்தார்.
கோவையில் நேரு மைதானத்தில் உள்ள சுற்றுப்பாதையில் வடிகால் அமைக்கும் பணிநடந்து வருகிறது. இந்தப் பணியை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின்உறுப்பினர் செயலர் நிஞ்சன் மார்டின் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கோவையில் உள்ள நேரு விளையாட்டுமைதானத்தில் வடிகால் அமைக்குப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி விரைவில்முடிவடையும். இந்த மைதானத்தில் சின்தெடிக் ஓடுகளம் அமைக்கத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், இந்த நேரு ஸ்டேடியத்திற்குள் உள்ள கடைகளுக்கு குறைந்த அளவுவாடகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகையை உயர்த்த கடைநடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும்வருவாய், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
கோவையில் உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்குமுன்பே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் உள்ளரங்கவிளையாட்டு மைதானம் அமைக்கத் தேவையான இடம் தேர்வு செய்யப்படுவதில்சிக்கல் ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது.
ஆர். எஸ். புரத்தில் தற்போது உழவர் சந்தை அமைந்துள்ள இடம் மற்றும் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மாணவர் விடுதிக்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சிஅளிக்க மறுத்து விட்டது.
தற்போது ராம் நகரில் உள்ள சுவர்ணம்பிகா லே அவுட்டில் இடம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இதில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications