பாக். எதிர்காலம் இருண்டதாக இருக்கும்.. அமெரிக்கா
வாஷிங்டன்:
பாகிஸ்தான் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என்று கருத்துக் கணிப்பில்தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள "ஸ்டிராடெஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையம்"சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் பாகிஸ்தானின் எதிர்காலம் எதிர்பார்த்தஅளவுக்கு பிரகாசமாக இருக்காது. இருள்மயமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆட்சியை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கைப்பற்றி அங்கு ராணுவஆட்சியை ஏற்படுத்தி அக்டோபர் 12-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தஅறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன் என்று அறிவித்து அதற்காகமுயற்சிகளில் முஷாரப் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும், காஷ்மீர் பிரச்சினை உள்படஇந்தியாவுடனான மற்ற பிரச்சினைகள், பாகிஸ்தானின் பொருளாதார இறக்கம்,இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் போன்றவற்றால் பாகிஸ்தானின் எதிர்காலம்கேள்விக்குறியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைஇந்தியா 28 சதவீதம் உயர்த்தியுள்ளது. அத்துடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவஒதுக்கீடு வெறும் 10 சதவீதம்தான். ஆனால், அந்த நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒதுக்கீட்டுடன்ஒப்பிடும்போது மிகமிக அதிகம்.
மேலும், ஷஹீன்-1 என்ற பெயரில் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்குவது என்ற முடிவு,பாதுகாப்புத் திட்டத்தில் பெரிய மாற்றம் எதையும் செய்ய பாகிஸ்தானிடம் இப்போதைக்குஎந்த திட்டமும் இல்லை என்றே தெரிகிறது.
நாட்டில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு பாகிஸ்தான் அரசு அதிக முக்கியத்துவம்கொடுப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவில்தான் நிதி ஒதுக்கப்படுவது கவலை தரும்விஷயமாகும்.
பெண் கல்விக்குப் பாகிஸ்தானில் அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உலகிலேயேபெண் கல்வி சதவீதத்தில் பாகிஸ்தான் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. மேலும், மக்கள்தொகை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் பாகிஸ்தானின் எதிர்காலத்துக்குச் சவாலாகவிளங்குவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications