கருணாநிதியைக் குறை கூறுகிறது கர்நாடகம்
பெங்களூர்:
ராஜ்குமார் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தனது முழு அதிகாரத்தையும்பயன்படுத்தவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 66 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனத்திற்குஉள்ளாகியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கிருஷ்ணாவுக்கு பல்வேறு விதமான யோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள்தெரிவித்தனர். எம்.பிக்களுடனும் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தின் இறுதியில், பிரச்சினை காரணமாக டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைசந்திக்க முதல்வர் கிருஷ்ணா முடிவு செய்தார்.
கூட்டத்தில் பேசிய பலர், இப்போதைய நடைமுறை தொடர்வதில் மாற்றம்தேவையில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் தமிழக முதல்வர் கருணாநிதிகுறித்து அதிருப்தி வெளியிட்டனர்.
முதல்வர் கருணாநிதி தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி ராஜ்குமார்விடுதலையை விரைவுபடுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லைஎன்று எதிர்க்கட்சியினர் குறைபட்டுக் கொண்டனர்.
பெயர் கூறிக் கொள்ள விரும்பாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில்,கருணாநிதியின் செல்வாக்கு எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை முழுமையாகஅவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கோபாலை விடவும் நல்ல வழி அவருக்குநிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அதை அவர் பயன்படுத்தாதது எங்களுக்குவியப்பையேத் தருகிறது என்றார் அவர்.
இருப்பினும் கருணாநிதி தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் கொடுததுவருகிறார் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார். இதே கருத்தையே உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும் வலியுறுத்தினார். தமிழக அரசு தன்னால் முடிந்தஅனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டார் கார்கே.
ஆனால் இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருமாநிலங்களுக்கிடையே புதிதாக எந்த மோதலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காககர்நாடக முதல்வர் நழுவி வருகிறார் என்று அவர்கள் கூறினர்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டது தமிழகத்தில்தான்.இது அவர்களது பிரச்சினை. அவர்கள்தான் ராஜ்குமாரை மீட்டுத் தர வேண்டும்என்றார்.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்ட பின் தமிழகஅரசுக்கு வந்த முதல் ஆடியோ கேசட், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மூலமேஅரசுக்கு வந்தது. தன்னைத் தேடி கோபால் வருகிறார் என்றும் தெரிந்து கூட வீரப்பன்கேசட்டை அவரிடம் கொடுத்து அனுப்பவில்லை.
வீரப்பன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூக கட்சியானபாட்டாளி மக்கள் கட்சி வீரப்பன் விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறது. அந்தக் கட்சித்தலைவர் மூலம்தான் முதல் கேசட்டும் வந்தது.
இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் மற்றும் வீரப்பனின் மற்றொரு கேசட்டைப் பெற்றவருமான தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோருக்கு கருணாநிதி நெருக்கடி தர முடியாதாஎன்றார்.
இப்போது பா.ம.கவுக்கும், திமுகவுக்கும் இடையே ஒரே கூட்டணியில் இருந்தாலும்கூட கசப்பான உறவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பன் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி கிடைத்தால், பாண்டிச்சேரியில் நடக்கும்சட்டசபைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு கூடுதல் இடம் ஒதுக்க நேரிடும் என்பதால்அக்கட்சியை இப்பிரச்சினையில் இழுக்க கருணாநிதி யோசிக்கிறார் என்று ஒரு எம்.பிகூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications