சேலத்தில் மழைக்கு 2 பேர் பலி
சேலம்:
சேலத்தில் பெய்த கடும் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உட்பட இரண்டுபெண்கள் இறந்தனர்.
சேலத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால்பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடிசை வீடுகளின் சுவர்கள்மழையால் பாதிப்படைந்தன.
சேலத்தில் புத்து மாரியம்மன் கோயில் வீதியில் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமானவீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் பெரியண்ண ஆசாரி குடியிருந்துவந்தார்.
செவ்வாய்க்கிழமை பெய்த கடும் மழையில் மூர்த்தியின் வீட்டுச் சுவர் நனைந்து இடிந்துவிழுந்தது. இந்த சுவர், பெரியண்ணன் ஆசாரியின் வீட்டிற்கும் பொதுச் சுவராகஇருந்தது.
அப்போது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெரியண்ணன் ஆசாரியின்மனைவி மாரியம்மாள் (65) சுவர் இடிபாடுகளில் சிக்கினார். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தும் காப்பாற்ற இயலவில்லை.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புபடையினரும் முயன்று மாரியம்மாளை உயிருடன் மீட்க இயலவில்லை. அவரதுஉடலை மட்டுமே மீட்டனர்.
இதையடுத்து பெரியண்ணன் குடும்பத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல்வர் நிவராணநிதியிலிருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போன்று, சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சபாபதி. இவர்தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகசுவர் இடிந்து விழுந்தது. இதில் அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர். ஆனால்,சபாபதியின் மகள் செல்வி (7) இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications