டெலிபோன் இணைப்பு கொடுங்கள்.. சந்திரிகாவிடம் சுசாந்திகா கோரிக்கை
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொடுக்க முன் வந்த பண உதவியை வேண்டாம் என்றுமறுத்துவிட்டார் இலங்கையின் அதலெடிக்ஸ் வீராங்கனை சுசாந்திகா ஜெயசிங்கே.
சமீபத்தில் நடந்து முடிந்த சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில்சுசாந்திகா வெண்கலப் பதக்கம் வென்றார்.
அந்த ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகளிலேயே இலங்கைக்குப் பதக்கம்வாங்கித் தந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந் நிலையில், சிட்னியிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு திரும்பியசுசாந்திகாவுக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புக்கு நன்றிதெரிவிப்பதற்காக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை சுசாந்திகா சந்தித்தார்.
அப்போது, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பாராட்டி வெளிநாட்டில்பயிற்சி எடுக்க அரசு சார்பில் பண உதவி செய்வதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்தார்.
ஆனால், அந்த உதவியை ஏற்க சுசாந்திகா மறுத்துவிட்டார். பண உதவி செய்யமுன்வந்ததுக்கு மிக்க நன்றி. ஆனால், அந்த உதவி எனக்கு வேண்டாம். அரசு எனக்குஉதவ விரும்பினால், பணம் கட்டாமல் இணைப்பு துண்டிக்கப்பட்ட எனதுதொலைபேசிக்கு மீண்டும் இணைப்பு கொடுக்கும்படி சுசாந்திகா அப்போது கேட்டுக்கொண்டார்.
தன்னிடம் இலங்கை மூத்த அமைச்சர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதுகுறித்து குற்றச்சாட்டு கூறியும் அது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதலால்அரசு மீது அவர் கோபம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனாலேயே அரசு அளிக்க முன் வந்த பண உதவியை ஏற்க அவர்மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் பயிற்சி பெற தன்னிடமுள்ள வாகனத்தை விற்று அதன் மூலம்கிடைக்கும் பணத்தைச் செலவிட இருப்பதாகவும், அதற்காக அரசிடமிருந்து எந்தஉதவியும் பெறப்போவதில்லை என்றும் சுசாந்திகா தெரிவித்துள்ளார்.
1997-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். அப்போது அந்த சாதனையைப்பாராட்டி எனக்கு வீடு ஒன்றைப் பரிசாகத் தருவதாக இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால், இன்னும் எனக்கு அந்த வீடு தரப்படவில்லை. இப்போது அந்த வீட்டைஎனக்குத் தர அதிபர் சந்திரிகா குமாரதுங்கா முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், சிட்னி ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் ரூ. 10 லட்சம் பரிசுவழங்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத் துறை அறிவித்தது. அந்த பரிசுத்தொகையும் எனக்கு விரைவில் வழங்கப்படும் என்று கருதுறேன் என்றார் சுசாந்திகா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications