நாய் ஒன்று புலியானது .. சென்னையில் ஒரு "அதிசயம்
சென்னை:
துப்பாக்கியை தூக்கிக் கொண்டு புலியை பிடிக்கப் போன போலீஸ் படை கடைசியில்நாயை கண்டு திடுக்கிட்டு திரும்பியது.
இப்படியொரு சம்பவம் சென்னை புறநகர் பகுதியான பெரவல்லூரில் நடந்துள்ளது.
இப்பகுதியில் புலி ஒன்று நடமாடுவதாக தகவல் பரவவே மக்கள் பீதியில் தவித்தனர்.வீட்டுக்கு வீடு புலியை பற்றித் தான் பேச்சு. புலி அப்படி இருந்து; இப்படி இருந்ததுஎன்று நேரில் பார்த்தவர்கள் போல் மக்கள் பேசிக் கொள்ளவே புலிப் பயம் இப்பகுதிமக்களை போட்டு வாட்டியது.
புலியை பிடிக்க போலீஸ் உதவியை நாடினர் மக்கள். போலீசாரும் துப்பாக்கிகள், அதிகசக்திவாய்ந்த டார்ச் லைட்டுகள் என்று பலத்த ஆயுதங்களுடன் புலியை பிடிக்கத்தயாராகினர். உதவிக்கு வனத்துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டனர்.
எல்லோரும் அடங்கிய ஒரு பெரும் படையே அந்த பகுதியை முற்றுகையிட்டது. ஊரேபரபரப்பானது. பயம் கலந்த எதிர்பார்ப்புடன் மக்கள் புலியை காண ஆவலோடுஇருந்தனர்.
போலீசாரும் அசராமல் சந்து பொந்துகளையெல்லாம் விடாமல் தேடினர். புலிஎங்காவது பதுங்கியிருக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.
ஆனால், புலி எங்குமே இருந்தததாக தெரியவில்லை. அதற்கான தடயம் இல்லை.குழப்பத்தில் இருந்த போலீசாருக்கு ஊருக்கு அருகில் இருந்த தண்ணீர் குட்டைகண்ணுக்குத் தெரிந்தது.
சாக்கடையும், சகதியுமாக இருந்த அந்த தண்ணீர் குட்டைக்குள் புலி பாதுகாப்பாகபதுங்கியிருக்கலாம் என்று நம்பினர். மிகுந்த எச்சரிக்கையோடு அந்த குட்டையைநெருங்கியபோது அவர்கள் எண்ணியபடி சேறும் சகதியும் முதுகில் அப்பியபடி பெரியசைஸில் மிருகம் ஒன்று நீரில் இருப்பது தெரிந்தது.
புலி தான் அது என்று நம்பிய போலீசார் சந்தடியில்லாமல் அதை பிடிக்கஎத்தணித்தனர். அப்போது அந்த குட்டையில் இருந்து மெல்ல எழுந்து வெளியேவந்தது ஒரு பிரவுன் கலர் நாய்.
கடுப்புடன் திரும்பிச் சென்றனர் போலீஸார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications